Skip to content

யாக்கை

யாக்கை 17

யாக்கை 17 நிழல்மழை   ஊரிலிருந்து   வெங்கடேசன் நேராக ஸ்டேஷனுக்கு தான் வந்தான். இங்கன எதும் பேச வேணாம் என்பது போல் கண்ணைக் காட்டிய சுந்தர்ராஜ் ஏட்டையா அவனை அழைத்துக்கொண்டு சிக்கந்தர் பாய் டீக்கடைக்கு வந்தார். அன்று வெள்ளிக்கிழமை என்பதால் உழவர்… Read More »யாக்கை 17

யாக்கை 16

யாக்கை 16 துன்பச்சகதி எம்.எஸ். முதலாளியின் வீடு பல்லவி தியேட்டரைத் தாண்டி முன்னூறு மீட்டர் கடந்தால் மெயின் ரோடிலிருந்து திரும்பும் முதல் சந்தில் நுழைந்ததும் இரண்டாவது வீடாக அமைந்திருந்தது. அந்த 300 மீட்டரைக் கடந்தால் நகரத்தின் ஆகப் பரபரப்பான சாலை. உள்வாங்கி… Read More »யாக்கை 16

யாக்கை 15

யாக்கை 15 கடப்பாடு எஸ்.ஐ பூரணச்சந்திரன் வந்து சேரும் போது மணி பன்னிரெண்டு. ஸ்டேஷனுக்கு முன்னால் கூடி இருந்த பெரும்பாலானவர்கள் உள்ளே புல்லட் நுழையும் போது கலைந்து ஓரமாய்ப் போனார்கள். வண்டியை விட்டு இறங்கியதும் சைடு கண்ணாடியில் தன் முகத்தைப் பார்ப்பது… Read More »யாக்கை 15

யாக்கை 14

யாக்கை 14 மந்தாரம் மழை வலுத்துக் கொண்டிருந்தது. மழை எப்போது பெய்கிறது என்பதைப் பொறுத்து அதனை நினைவில் வைத்துக் கொள்வதற்கான காரணங்கள் உருவாகத் தொடங்குகின்றன. தான் உருவாக்கும் காரணங்களைப் பொறுத்து சிலரது வாழ்வில், அந்த மழையே மறக்க முடியாத சம்பவங்களாக மாறிவிடுகிறது.… Read More »யாக்கை 14

யாக்கை 13

யாக்கை 13 வெறுப்பின் தடம் மழை பெய்து ஓய்ந்திருந்தது. சாலையில் போக்குவரத்து இன்னும் மும்முரமாகவில்லை. தூறலைப் பார்த்ததுமே பல திட்டங்கள் மாற்றி அமைக்கப் படுவது மனித விந்தை. அடித்துப் பெய்கிற மழைக்குத் தர வேண்டிய அத்தனை மரியாதையும் இங்கே தூறலுக்கே தரத்… Read More »யாக்கை 13

யாக்கை 12

மகிழ மரத்தடி செல்வத்துக்குத் தலை விண் விண்ணென்று தெறித்தது. அந்தத் தெரு பெரிய ஜன சந்தடியோ போக்குவரத்தோ இல்லாத துணை வீதி போலத் தான் வெறுமை வழியக் கிடந்தது. செல்வத்துக்கு நடந்தது என்ன எனப் புரிவதற்குள் உடம்பெல்லாம் ரத்தம் கொதிக்கத் தொடங்கியது.… Read More »யாக்கை 12

யாக்கை 11

யாக்கை 11 வாழ்வின் வானம் செல்வா கழுவுகிற நீரில் நழுவுகிற சமர்த்தன். தன்னை நனைத்த மழையைக் கரையோரம் நடக்கிற சாக்கில் வெயிலில் உலர்த்தி விட்டு டாட்டா காட்டிப் புறப்படும் புத்திசாலிப் பறவை அவன். திருமணம் பெரிய தோல்வியானதில் லேசாய் மனக்கீறல் ஏற்பட… Read More »யாக்கை 11

யாக்கை 9 &10

யாக்கை 9 கொக்கி ஷோரூம்கள் பெருகியது வெளிப்படையாய்த் தெரிந்தாற் போலவே  வண்டி வாகனம் சார்ந்து சர்வீஸ் உள்ளிட்ட சகல துறைகளும் பெருக்கெடுத்தன. ஒவ்வொரு வங்கிக்கும் ஒரு கதிர் இருந்தே ஆகவேண்டும். வங்கிகள் பொதுவாக எந்த ஊரிலும் இரண்டு ஏஜன்ஸிக்கு மேல் தராமல்… Read More »யாக்கை 9 &10

யாக்கை 8

யாக்கை 8 கண்மூடிக் குதிரை திரவியனூர் பஸ் ஸ்டாண்டு பலகாலமாய் அந்த வட்டாரத்தின் ஒரே வாகன சங்கமமாக இருந்தது. ஐந்தாண்டுக்கு முன்பாக மங்களாபுரம் எம்பியாக இருந்த ராமகிருஷ்ண சம்பத் திரவியனூரில் பிறந்தவர். பெரிய கோடீஸ்வரராக உயர்ந்த பிறகு ‘ஊருக்கு எதுனா செய்துரணும்’… Read More »யாக்கை 8

யாக்கை 7

7.காற்றின் ஆதுரம் ரேடியோவில் ஒலித்துக் கொண்டிருந்த பாடல் முடிவடைந்து செய்திகள் தொடங்கின. சிந்தாமணிக்கு இந்தக் கரி அடுப்பை விட்டொழிப்பது என்றைக்கு வசப்படும் என்று ஆற்றாமையாக வந்தது. அவள் முன்பு வேலை பார்த்த இஞ்சினியர் பங்களாவில் இருக்கிறதும் தெரியாமல் எரிவதும் உறுத்தாமல் சமையல்… Read More »யாக்கை 7