Skip to content

novel

யாக்கை 23

யாக்கை 23 யுத்தம் அன்று காலையிலிருந்தே மின்சாரம் போய் வந்த வண்ணம் இருந்தது. கலியாண மண்டபத்தின் மேனேஜருக்கும் விசேஷ வீட்டுக்காரர்களுக்கும் அது தொடர்பாக நெடியதோர் பேச்சுவார்த்தை நடந்து முடிந்திருந்தது. மூவரசபுரத்திலிருந்து வரவழைக்கப் பட்ட ஜெனரேட்டர் வண்டி மண்டபத்தின் பின்வாசல் பக்கம் நிறுத்தப்பட்டு… Read More »யாக்கை 23

யாக்கை 17

யாக்கை 17 நிழல்மழை   ஊரிலிருந்து   வெங்கடேசன் நேராக ஸ்டேஷனுக்கு தான் வந்தான். இங்கன எதும் பேச வேணாம் என்பது போல் கண்ணைக் காட்டிய சுந்தர்ராஜ் ஏட்டையா அவனை அழைத்துக்கொண்டு சிக்கந்தர் பாய் டீக்கடைக்கு வந்தார். அன்று வெள்ளிக்கிழமை என்பதால் உழவர்… Read More »யாக்கை 17

யாக்கை 16

யாக்கை 16 துன்பச்சகதி எம்.எஸ். முதலாளியின் வீடு பல்லவி தியேட்டரைத் தாண்டி முன்னூறு மீட்டர் கடந்தால் மெயின் ரோடிலிருந்து திரும்பும் முதல் சந்தில் நுழைந்ததும் இரண்டாவது வீடாக அமைந்திருந்தது. அந்த 300 மீட்டரைக் கடந்தால் நகரத்தின் ஆகப் பரபரப்பான சாலை. உள்வாங்கி… Read More »யாக்கை 16

யாக்கை 15

யாக்கை 15 கடப்பாடு எஸ்.ஐ பூரணச்சந்திரன் வந்து சேரும் போது மணி பன்னிரெண்டு. ஸ்டேஷனுக்கு முன்னால் கூடி இருந்த பெரும்பாலானவர்கள் உள்ளே புல்லட் நுழையும் போது கலைந்து ஓரமாய்ப் போனார்கள். வண்டியை விட்டு இறங்கியதும் சைடு கண்ணாடியில் தன் முகத்தைப் பார்ப்பது… Read More »யாக்கை 15

யாக்கை 14

யாக்கை 14 மந்தாரம் மழை வலுத்துக் கொண்டிருந்தது. மழை எப்போது பெய்கிறது என்பதைப் பொறுத்து அதனை நினைவில் வைத்துக் கொள்வதற்கான காரணங்கள் உருவாகத் தொடங்குகின்றன. தான் உருவாக்கும் காரணங்களைப் பொறுத்து சிலரது வாழ்வில், அந்த மழையே மறக்க முடியாத சம்பவங்களாக மாறிவிடுகிறது.… Read More »யாக்கை 14

யாக்கை 13

யாக்கை 13 வெறுப்பின் தடம் மழை பெய்து ஓய்ந்திருந்தது. சாலையில் போக்குவரத்து இன்னும் மும்முரமாகவில்லை. தூறலைப் பார்த்ததுமே பல திட்டங்கள் மாற்றி அமைக்கப் படுவது மனித விந்தை. அடித்துப் பெய்கிற மழைக்குத் தர வேண்டிய அத்தனை மரியாதையும் இங்கே தூறலுக்கே தரத்… Read More »யாக்கை 13

யாக்கை 1

யாக்கை 1 பைத்தியப் பொழுது தன் கையில் இருக்கும் பச்சை நிற ஃபைலை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார் எம்.எஸ். தகவல்களை ஒவ்வொன்றாகப் படித்தார். கொலையில் ஈடுபட்டது மொத்தம் ஐந்து பேர். 56 வயதுக்காரன் இருதயம் தான் தலைவன். இருப்பதில் இளையவன் பெயர்… Read More »யாக்கை 1

எழுத்தாளர் இரா.முருகனின் பார்வையில் மிட்டாய்பசி

மிட்டாய் பசி – ஆத்மார்த்தி மதுரையில் தொடங்குகிறேன். மதுரைக்கு நாற்பத்தெட்டு கிலோமீட்டர் அருகே சிவகங்கையிலிருந்து வருகிறவன் நான். மதுரைக்காரரான ஜி.நாகராஜன் எழுதி அறுபதுகளில் வெளிவந்த நாவலான நாளை மற்றுமொரு நாளே நூலை சிவகங்கையில் என் ஆசான் அன்னம் பதிப்பகம் கவிஞர் மீரா… Read More »எழுத்தாளர் இரா.முருகனின் பார்வையில் மிட்டாய்பசி

புதிய நாவல்

எனது புதிய நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன். எழுதித் தீராத மதுரையின் மனிதர்களில் இன்னுமொருவனை எடுத்து எழுதி வருகிறேன். இதன் தலைப்பை எல்லோருக்கும் மகிழ்வோடு அறிவிக்கிறேன். வாழ்தல் இனிது