Skip to content

பிற

லிங்கம்

லிங்கம் பார்த்தேன். தம்பி வாஸ்தோவின் எழுத்து கச்சிதமாக அமையப் பெற்றிருக்கிறது. பல இடங்களில் வசனம் வீர்யமாகவும் அளவு கூடாமலும் ஒலித்தது. புஷ்பா-சுப்ரமணியபுரம்-நந்தா- தொடங்கித் தமிழில் ஏற்கனவே எடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான கேங்க்ஸ்டர் படங்கள் பலவற்றிலும் பார்த்துப் பழக்கமான காட்சிகள் பலவற்றையும் கழித்து விட்டுப்… Read More »லிங்கம்

யாக்கை 23

யாக்கை 23 யுத்தம் அன்று காலையிலிருந்தே மின்சாரம் போய் வந்த வண்ணம் இருந்தது. கலியாண மண்டபத்தின் மேனேஜருக்கும் விசேஷ வீட்டுக்காரர்களுக்கும் அது தொடர்பாக நெடியதோர் பேச்சுவார்த்தை நடந்து முடிந்திருந்தது. மூவரசபுரத்திலிருந்து வரவழைக்கப் பட்ட ஜெனரேட்டர் வண்டி மண்டபத்தின் பின்வாசல் பக்கம் நிறுத்தப்பட்டு… Read More »யாக்கை 23

தமிழ்விக்கி

தமிழ்விக்கி தமிழ்விக்கி தொடங்கப்பட்டு படிக்கக் கிடைத்த நாள் முதற்கொண்டு இன்று வரை அந்தத் தளத்தை விடாமல் பின்பற்றி வருகிறவர்களில் நானும் ஒருவன். அதனைத் தொடக்க காலத்தில் வாசிக்க நேர்கையில் இத்தனை பெரிதாக,இவ்வளவு நேர்த்தியாகத் தமிழ் விக்கியின் பரவல் விரிந்துகொண்டு செல்லும் என்றெல்லாம்… Read More »தமிழ்விக்கி

பெருநிழல் பறவை

சரவணன் சந்திரன் அன்பு நண்பன். எழுத்தின் மீது எப்போதும் தீராத தாகம் கொண்ட பெருநிழல் பறவை அவன். அவனது எழுத்துக்கு நான் ரசிகன். அவன் எழுத்தின் ஊடுபாவுகளை வாழ்வெங்கும் சந்திப்பதற்கான வாய்த்தல்கள் என்னை ஆச்சர்யமூட்டுபவை. வேகமும் நிதானமும் கொண்ட வினோத மனப்பான்மை… Read More »பெருநிழல் பறவை

பா.ராகவன்

பா.ராகவன் இன்றைக்கு பா.ராகவனுக்குப் பிறந்த நாள். நான் ஸ்கூல் படிக்கும் காலத்திலேயே கல்கி இன்ன பிற இதழ்களில் எங்காவது அடிக்கடிப் பார்த்துக் கொண்டே இருக்க வாய்த்த பெயர் ராகவனுடையது. மாபெரும் திமிங்கிலங்களின் காலத்தில் ஒரு குட்டி மீன் நீந்தியும் ஒளிந்து மறைந்தும்… Read More »பா.ராகவன்

பூவின் பூக்கள்

வண்ணதாசன் அந்நியமற்ற எழுத்தால் மனதுக்கு நெருக்கமாக உணரச் செய்பவர். அவருடைய கதைகள் தோரணப் பூக்களைப் போல் பரிச்சயத்தின் தற்கணங்களாகப் பெருகுகின்றன. வாழ்வின் நிமிஷங்களை மனிதர்களைப் பார்ப்பதற்கு உகந்த பார்வைமானிகளை உற்பத்தி செய்துகொள்ளக் கற்பிப்பவை. சின்னஞ்சிறிய எவற்றையும் சட்டென்று கடந்து விடுவதிலிருந்து மீண்டும்… Read More »பூவின் பூக்கள்

கவுண்டமணி

எத்தனையோ படங்கள் திரைக்கதை இன்னபிற சொதப்பி எடுத்தாலும் அவற்றைப் பொறுத்துக் கொண்டு பார்த்ததற்குப் பாடல்களும் பின்னணி இசையும் காரணங்களாக இருந்திருக்கின்றன. கூடவே அப்படியான படங்கள் பலவற்றைப் பார்த்ததற்கு முக்கியக் காரணம் என்று இன்னொருவரைச் சொல்ல முடியும். அவர் தான் மகான் கவுண்டமணி.… Read More »கவுண்டமணி

ஜெயமோகன்

ஜெயமோகன் காலகால ஒளி ஜெயமோகனை எப்போது முதன்முதலில் வாசித்தேன் என்பது குழப்பமாகத் தான் நினைவிலிருக்கிறது. நன்கு அறிந்து வாசித்தது பின் தொடரும் நிழலின் குரல். அதற்குப் பல வருடங்கள் முன்பே சின்ன சைஸ் கணையாழியில் என நினைவு என் பதின்மத்தின் பாதி… Read More »ஜெயமோகன்

இளங்கோவன் முத்தையா

அன்பு நண்பர் இளங்கோவன் முத்தையாவுக்கு இன்று பிறந்த நாள். மதுரையில் வங்கியியல் சார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிற இளங்கோவன் ரசனை மிகுந்த மனிதர். தனக்கென்று தனித்த பார்வைகள் கொண்ட நண்பர். இவரது விம்லா உள்ளிட்ட சிறுகதைகள் பரவலான வாசிப்பையும் கவனத்தையும்… Read More »இளங்கோவன் முத்தையா