வலைப்பூ

இன்றெல்லாம் கேட்கலாம் 1

பாடல்கள் என்றும் இனியவை. தன் சின்னஞ்சிறு கால்களால் கொலுசுகள் ஒலிக்கச் சட்டென்று கதவு தாண்டி வந்துவிடுகிற குழந்தையொன்றின் புன்னகை வருகை போலவே சில பாடல்கள் மனத்தின் அணுக்கமான சன்னலொன்றைத் திறந்து வைப்பவை. ஒரு தடவை யதார்த்தத்தின் எதிர்பாரா நேர்தலில் கேட்க வாய்க்கிற… Read More »இன்றெல்லாம் கேட்கலாம் 1

ஜெய்பீம்

நீதி என்பது இறுதியாக எஞ்சவல்ல தெய்வம். எல்லா இருளுக்கும் எதிரான ஒற்றைப் பேரொளி. ஜெய்பீம் நீதிமன்றக் களனை மையமாக எடுக்கப் பட்ட இந்தியத் திரைப்படங்களில் மிகவும் முக்கியமானதொரு திரைப்படம். நீதிநாயகர் சந்துருவின் வழக்குரைஞர் வாழ்வில் முக்கியமானதொரு வழக்கை மையக்களனாக்கித் தனது ஜெய்பீம்… Read More »ஜெய்பீம்

மழை ஆகமம் 3

 கானல் ஆயம் நீயற்ற தனிமை இருளில் வீசுகிற காற்றைத் தாங்கவியலாது என் மலர்மேனி சில்லிடுதே உன் தாமதத்துக்கான காரணம் எதுவென்றிருந்தாலும் என் வியர்வைத்துளிகளுக்கான சமாதானங்களல்லவே இதுவே பகலெனில் ஒரு குறையுமில்லாத் தனிமை. வந்து செல்கிற வழக்கப்பொதுவிடம். என்றபோதும் கண்ணாளன் வாராமற்போனாய் ஏனென்றறியத்… Read More »மழை ஆகமம் 3

புதிய நாவல்

எனது புதிய நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன். எழுதித் தீராத மதுரையின் மனிதர்களில் இன்னுமொருவனை எடுத்து எழுதி வருகிறேன். இதன் தலைப்பை எல்லோருக்கும் மகிழ்வோடு அறிவிக்கிறேன். வாழ்தல் இனிது

மிஸ்டர் கே

மிஸ்டர் கேயை எப்படியாவது அறிமுகமாக்கிக் கொள்ள வேண்டும் என்பது மட்டும் தான் இந்தக் கதையைப் பொறுத்தவரை என் ஒரே லட்சியம். இதற்கு வெளியில் வேறேதாவது லட்சியம் என்று இருக்கிறதா என யோசிக்கிறேன். இதுவரைக்கும் எனக்கென்று தனியாக லட்சியம் என்று எதுவுமே இருந்ததில்லை.… Read More »மிஸ்டர் கே