Skip to content

Writer Aathmaarthi

ஆத்மார்த்தி | எழுத்தாளர்

இன்றெல்லாம் கேட்கலாம் 10

செல்வாவும் எஸ்.ஜானகியும் பின்னே கங்கை அமரனும் 90களின் தொடக்கத்தில் டாக்டர் ராஜசேகரின் தம்பி என்று முகவரியின் முதல்வரியோடு நடிக்க வந்தவர் செல்வா. திருத்தமான முகமும் தெக்கத்திக் குரலும் அமைந்தவர். இயல்பான நடிகரும் கூட. கஸ்தூரி ராஜா இயக்கிய ஆத்தா உன் கோயிலிலே… Read More »இன்றெல்லாம் கேட்கலாம் 10

20 வான்பாதி

20 வான்பாதி சிறுபிள்ளை மணிக்கட்டு வலிக்க வலிக்க ஏற்றிக் கொண்டிருக்கையில் சட்டென்று நூலறுபடுகிற பாதிவான் பட்டம் போலொரு பெரிய விக்கல் அதற்கு நடுவே வெறித்த கண்களோடு உயிரைவிடுகிற நாள்பட்ட பிறழ்சாட்சியக் காரன் வெளிப்படுத்தச் சித்தங்கொண்ட முதலாவது உண்மைபோலவே எனக்குள்ளே புதைந்தழியட்டும் எனதன்பு… Read More »20 வான்பாதி

19.கவிதை என்பது என்ன

கவிதை என்பது என்ன திக்கித்து இருப்பதா மௌனித்திருப்பதா இடத்திலிருந்து எழுவதும் நகர்வதுமா (மழை வருகிறாற் போலிருக்கிறதல்லவா என்றபடியே கடந்து சென்றவனின் முதுகையே வெறித்தேன்) மழை வருதலா முதுகை வெறித்தலா (ஏன் நேத்து வரேன்னு சொல்லிட்டு வர்லை என்று செல்லம் கடிந்து நெஞ்சில்… Read More »19.கவிதை என்பது என்ன

மனோபாலா

மனோபாலா:அரிதாரம் தேவையற்ற கோமாளி   மனோபாலாவை இயக்குனர் என்று முதன் முதலில் உற்று கவனித்த படம் ஊர் காவலன். எண்பதுகளில் ரஜினிகாந்த் நடித்த பல படங்களை எஸ் பி முத்து ராமன் அல்லது ராஜசேகர் இருவரில் ஒருவர் தான் இயக்கினார்கள். சத்யா… Read More »மனோபாலா

நூல் வெளியீட்டு விழா

நூல் வெளியீட்டு விழா வருகிற 29 ஆம் தேதியன்று மதுரை- மேலூரில் பாபு சசிதரனின் புதிய கவிதை நூல் வெளியீட்டு விழாவில் நூலைப் பெற்றுக் கொண்டு உரையாற்ற இருக்கிறேன். வாய்ப்பிருக்கும் அன்பர்கள் கலந்துகொள்ள வரவேற்கிறேன்.      

வைகை இலக்கியத் திருவிழா

தமிழக அரசு முன்னெடுக்கும் இலக்கிய விழாக்கள் மாவட்டந்தோறும் நடந்தேறி வருகின்றன. அந்த வரிசையில் நாளை 26-03-2023 மற்றும் திங்கட்கிழமை 27-03-2023 இரண்டு தினங்கள் மதுரை உலகத் தமிழ்ச்சங்க வளாகத்தினுள் வைகை இலக்கியத் திருவிழா நடக்கவிருக்கிறது. நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 4.15 முதல்… Read More »வைகை இலக்கியத் திருவிழா

இன்றெலாம் கேட்கலாம் 8

இன்றெலாம் கேட்கலாம் 8 வணிக சினிமாவின் தகர்க்க முடியாத தூண்கள் பல. அசைக்கவே நாளாகும். தவிர்க்கப் பெருங்காலம் தேவை. எழுபதுகளில் பத்தில் ஒரு படத்தின் நாயகன் சோகப்பாட்டைக் குடித்து விட்டுப் பாடுவான் அல்லது குடித்தபடி பாட முயலுவான். எண்பதுகளில் குடி+சோகம் என்றே… Read More »இன்றெலாம் கேட்கலாம் 8

கதைகளின் கதை 8

கதைகளின் கதை 8 வாழ்வாங்கு வாழ்தல் இருளின் திசையுள் புகுந்து செல்கிறவனுக்கு முதல் வெளிச்சமாகச் சின்னஞ்சிறு ஒளிப்பொறி கிட்டினால் கூடப் போதும்.ஒருவேளை அப்படியானதொரு சிறுபொறி கிடைக்கவே இல்லாமல் போனாலும் காலம் அடுத்த தினத்தின் அதிகாலையைப் பெருவெளிச்சமாக்கித் தரும்.ஆகக் காலம் எதிர்த்திசையில் தன்… Read More »கதைகளின் கதை 8

மொழிவழி மூலிகை

மொழிவழி மூலிகை முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப அவர்கள் எழுதியிருக்கும் நூல் தென் கிழக்குத் தென்றல். விஜயா பதிப்பகம் வெளியீடாக வந்திருக்கும் இந்த நூலில் தாவோ-ஜென்-சூஃபி குறித்த தத்துவப் பகிர்தல்களை வாசிக்க முடிகிறது. தாவோ பகுதிக்கான அணிந்துரையை எஸ்.ராமகிருஷ்ணனும் சூஃபி பகுதிக்கான முகவுரையை… Read More »மொழிவழி மூலிகை

18 சுமாராகப் பாடுகிறவள்

சமீபத்துப்ரியக்காரி 18 சுமாராகப் பாடுகிறவள் “சுமாராகப் பாடினேனா? என்றாள், பாடி முடித்து விட்டு. மெல்லப் புன்னகைத்தேன். ஒரு பாடலைப் பாடி முடித்த பிறகு அடுத்த சொல்லைப் பேசுவதென்பது மிகவும் கவனத்திற்குரியதாகிறது. அப்படியான சொற்களின் எடை ஒரு பாடலுக்கு நிகராய் இருந்து விடுபவை.… Read More »18 சுமாராகப் பாடுகிறவள்