Skip to content

கவிதை

“SORRY என்றொரு குறுஞ்செய்தி”

1. அந்த ஊரைச் சேர்ந்த யாராவது எங்களூருக்கு வந்ததுண்டா எனக் கேட்கையில் எல்லாம் ம் என்ற ஒற்றெழுத்து ஒருபதில் மாத்திரமே சொல்வது வழக்கம். உறங்கவும் விடாத விழிக்கவும் ஏலாத தீராக்கடன் நினைவின் மனப்பாழ் போலச் சொல்லியிராத ஒரு கதை 2. பிறழ்… Read More »“SORRY என்றொரு குறுஞ்செய்தி”

    சதுரங்கநாய் _________________ பேச்சுவாக்கில் “சதுரங்கநாய்” என்றேன். “அதென்னது?” முகம் சுளிக்கிறீர்கள். ஒவ்வொரு ஆட்டத்தின் போதும் சதுரங்கப் பலகையைச் சுற்றிச் சுற்றி யாராவது தன்னையும் அந்தக் கட்டங்களினூடே அனுமதிக்க மாட்டார்களா?வென காலங்காலமாய் வந்து வந்து அல்லாடுகிற ஆட்டமறியா நாய்ஜென்மத்தை நீங்கள்… Read More »

21 ஸ்டெல்லா என்பது வினைச்சொல்

சமீபத்து ப்ரியக்காரி 21 ஸ்டெல்லா என்பது வினைச்சொல் 1 ஸ்டெல்லா என்பது யார் யார் கேட்டாலும் எந்த பதிலும் சொல்வதில்லை என்பது நெடுங்காலப் புகார் 2 ஒரு ஸ்டெல்லா ஒரு போதும் ஸ்டெல்லா என்பது யார் எனக் கேட்க மாட்டாள் என்பதொரு… Read More »21 ஸ்டெல்லா என்பது வினைச்சொல்

யாராலும் எழுத முடியாத வரிகள்

வாசகபர்வம் 3     ஜூடாஸ் மரம் மலர்விழி வேரல் புக்ஸ் முதல் பதிப்பு டிசம்பர் 2022 120ரூ     யாராலும் எழுத முடியாத வரிகள் கவிதை எழுதுபவர்களுக்கு கண்ணில் படுவதெல்லாம் கருப்பொருளாய் மாறத்தக்கவையே. மெக்கானிக் ஒருவரது அழுக்கேறிய டூல்ஸ்… Read More »யாராலும் எழுத முடியாத வரிகள்

20.பண்டிகை தினத்துப் புன்னகை

சமீபத்துப் ப்ரியக்காரி 20 பண்டிகை தினத்துப் புன்னகை கேட்க கூடாத கேள்விகளின் வரிசையில் இதற்கும் ஒரு இடம் உண்டு என்பதை நீ அறிந்திருக்கவில்லையா? வேண்டுமென்றே விளைவு தெரிந்து ஒரு குற்றச் செயலைப் புரியும் அதே தீவிரத்தோடு அந்தக் கேள்வியை நீ கேட்டனையா?… Read More »20.பண்டிகை தினத்துப் புன்னகை

தேடிச்சிறத்தல்

தேடிச்சிறத்தல் 1 அம்மாவுக்கு மறதி அதிகம். பெரும்பாலும் அவள் தேடல் தேவை சார்ந்தவை. மின்சாரம் அணைகிற நேரம் மெழுகுவர்த்தியை தீப்பெட்டியை அவசரப்போழ்தின் விளக்கை எங்கேயெனத் தேடித் துழாவுவாள் அவற்றிலொன்றைக் கண்டடைகிற நேரம் அனேகமாக மின்சாரம் மீண்டிருக்கும் வெட்கப் புன்னகையோடு மறுபடி அதனதன்… Read More »தேடிச்சிறத்தல்

ஹம்மிங்

எப்போதும் எதையும் பாடியிராதவள் யாரும் சமீபத்திலில்லை என்பதான சூழல்வேகத்தில் அந்தப் பாடலின் இடைவரியொன்றைத் தன்னையறியாது பாடுகிறாள் அந்தவரி அடுத்த கணமே ஒரேயொரு ஒருவரிப்பாடலாக அனிச்சைகளின் பேரேட்டில் தன்னையெழுதிக் கொள்கிறது. இனிமேல் அந்தப் பாடல் என்னைக் கடக்கையிலெல்லாமும் அந்தவொரு வரி இவள் குரலில்… Read More »ஹம்மிங்

19.கவிதை என்பது என்ன

கவிதை என்பது என்ன திக்கித்து இருப்பதா மௌனித்திருப்பதா இடத்திலிருந்து எழுவதும் நகர்வதுமா (மழை வருகிறாற் போலிருக்கிறதல்லவா என்றபடியே கடந்து சென்றவனின் முதுகையே வெறித்தேன்) மழை வருதலா முதுகை வெறித்தலா (ஏன் நேத்து வரேன்னு சொல்லிட்டு வர்லை என்று செல்லம் கடிந்து நெஞ்சில்… Read More »19.கவிதை என்பது என்ன

10 நனவிலி

சமீபத்துப்ரியக்காரி 10 நனவிலி தனிமையென்றவொன்று எப்படியிருக்குமென்று ருசித்துப் பார்க்கமட்டுமேனும் ஒரேயொரு கணம் அதனொரு துளி அதன் துளியினொரு துகள் அந்தத் துகளினொரு அணுவளவேனும் என்னுள்ளிலிருந்து வெளியேறிப் போய்வாயேன் என்று இறைஞ்சியிறைஞ்சிக் கேட்டனன். “அப்படியே” எனச்சொல்லிச் சென்றவள் திரும்பி வருமட்டிலும் தன்னகத்தின் வாயிலில்… Read More »10 நனவிலி