Skip to content

வலைப்பூ

3 உமர்கயாம் ஓவியம்

தானாய் சுழலும் இசைத்தட்டு 3 உமர்கயாம் ஓவியம் பத்மஸ்ரீ குன்னக்குடி வைத்யநாதன் இசையுலக மேதை. அவருடைய வயலின் இழைதல்கள் காதலோடு ஒலித்தவை. கலைமாமணி, கர்நாடக இசைஞானி, சிறந்த இசையமைப்பாளருக்கான மாநில விருது சங்கீத நாடக அகாதமி விருது, ராஜா சாண்டோ விருது… Read More »3 உமர்கயாம் ஓவியம்

கவிதையின் முகங்கள் 11

கவிதையின் முகங்கள் 11  துப்பாக்கிச் சப்தம் எல்லாமே கச்சிதமாக இருக்கிறது,அன்பு நண்பனே! -கெரோவாக் கவிஞரும் நாவலாசிரியருமான கெரோவாக்கின் மேற்காணும் ஒற்றை வாக்கியம் தனக்குள் விரித்துத் தரும் அவலமும் பகடியும் கவிதாப்பூர்வமான அலைதலுக்கும் உணர்தலுக்குமானது. கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான ரான் பேகெட் ஒக்லஹாமா-துல்ஸாவில் பிறந்தார்.… Read More »கவிதையின் முகங்கள் 11

நகை

குறுங்கதை நகை கிறிஸ்டோ சினிமாவைக் காதலித்தவர். ஒரு வகை தவம் மாதிரி சினிமாவை எண்ணியவர். திரைப்படத்தை எப்படிப் பார்க்க வேண்டும் என்பதில் அழுத்தமும் திருத்தமுமான பல கோட்பாடுகளைக் கொண்டிருந்தார். இண்டர்வல்லில் அவருக்கு வாய் பேச வராது. அதே போல் காதுகளும் கேட்காது.… Read More »நகை

10 நனவிலி

சமீபத்துப்ரியக்காரி 10 நனவிலி தனிமையென்றவொன்று எப்படியிருக்குமென்று ருசித்துப் பார்க்கமட்டுமேனும் ஒரேயொரு கணம் அதனொரு துளி அதன் துளியினொரு துகள் அந்தத் துகளினொரு அணுவளவேனும் என்னுள்ளிலிருந்து வெளியேறிப் போய்வாயேன் என்று இறைஞ்சியிறைஞ்சிக் கேட்டனன். “அப்படியே” எனச்சொல்லிச் சென்றவள் திரும்பி வருமட்டிலும் தன்னகத்தின் வாயிலில்… Read More »10 நனவிலி

9 தானற்ற வேறொருவள்

சமீபத்துப்ரியக்காரி 9 தானற்ற வேறொருவள் வேறு வேறு மாந்தர்க்கு          வெவ்வேறு முத்தங்கள்    உண்டெனக் கருதுவதாயின்            ஒற்றைத் தருணமும்   எனக்கு வேண்டாம்        … Read More »9 தானற்ற வேறொருவள்

8 ஒன்றேயொன்று

சமீபத்துப்ரியக்காரி 8 ஒன்றேயொன்று உன் கண்களில் சதா கனன்றுகொண்டிருக்கிற காலகால ஒளியை மட்டுப்படுத்திய பின் தொடங்கும் முடிவற்ற இருளின் பூர்ணாகதம் நான்

7 பொன்-பொழுது-தோன்றல்

7 பொன்-பொழுது-தோன்றல்      சமீபத்துப்ரியக்காரி ஒரு மைதுனத்தின் பாதியில் நீ வந்து சேர்கின்ற அனிச்சையென்பது இவ்வாறானது. கவனிக்க மறந்த கொதி பொங்கி எரிதலை அணைத்து வைக்கிற பாலினொரு வெண்கோடு மெல்லக் கரைதாண்டிக் கூடத்திற்கு வந்து சேர்கையில் கூடவே அழைத்து வரும்… Read More »7 பொன்-பொழுது-தோன்றல்

6 பழைய

சமீபத்துப் ப்ரியக்காரி 6 பழைய அன்பே உன்னால்   உன்னை வெளிப் படுத்த முடியாத போது நானிந்தப்ரபஞ்சத்தை இரண்டாகக் கிழித்தெறிவேன். அதன் பின் எல்லாமும் இரண்டாய் மாறும். நீ யாருடைய கண்களுக்குத் தென்பட விரும்பவில்லையோ அவர்கள் ஒரு உலகத்தில் தள்ளப்படுவார்கள். அதன் பெயர்… Read More »6 பழைய

சமோசா

குறுங்கதை சமோசா திடீரென்று அவனுக்குத் தோன்றியது. ஆகச்சிறந்த சமோசா எது..? உலகின் உத்தமமான சமோசாவைத் தேடத் தொடங்கினான். சமோசா கிடைக்கும் அத்தனை நாடுகள் நகரங்கள் என எல்லாவற்றையும் அலசித் தீர்த்து விட்டான். சமீப வருடங்களில் அவனுடைய பேருணவாக பெருந்துயரமாக தீராக்கனவாக நில்லாச்சொல்லாக… Read More »சமோசா

இரா.முருகனின் சிறுகதைகள்

வருகிற 12 மார்ச் சனிக்கிழமை மாலை நேரலை/நிகர்மெய் நிகழ்வாக ஒரு இலக்கியக் கூட்டம். இதனை முன்னெடுத்திருப்பது “வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம்” எனும் இணையக் குழுமம். எழுத்தாளர் இரா.முருகனின் சிறுகதைகள் குறித்து நான் உரையாற்ற இருக்கிறேன். முழுவிவரங்கள் விரைவில் வாழ்தல் இனிது… Read More »இரா.முருகனின் சிறுகதைகள்