Skip to content

சமீபத்துப் ப்ரியக்காரி

பண்டிகை தினத்துப் புன்னகை

சமீபத்துப் ப்ரியக்காரி 20 பண்டிகை தினத்துப் புன்னகை கேட்க கூடாத கேள்விகளின் வரிசையில் இதற்கும் ஒரு இடம் உண்டு என்பதை நீ அறிந்திருக்கவில்லையா? வேண்டுமென்றே விளைவு தெரிந்து ஒரு குற்றச் செயலைப் புரியும் அதே தீவிரத்தோடு அந்தக் கேள்வியை நீ கேட்டனையா?… Read More »பண்டிகை தினத்துப் புன்னகை

19 தனியளின் சம்பாஷணை

சமீபத்துப் ப்ரியக்காரி 19 தனியளின் சம்பாஷணை 1 “இன்றைக்கும் நிலவு வரும்” என்கிற எண்ணத்தில் தொடங்குகிறது உறங்காமையின் இதிகாசம். 2 நிலா பார்த்தல் என்பது அடிமையைப் பழக்குவதற்கான உத்தம உபாயங்களிலொன்று. 3 எப்படி உறங்குவது என ஒரு கண் வெடிக்கையில் ஏன்… Read More »19 தனியளின் சம்பாஷணை

18 சுமாராகப் பாடுகிறவள்

சமீபத்துப்ரியக்காரி 18 சுமாராகப் பாடுகிறவள் “சுமாராகப் பாடினேனா? என்றாள், பாடி முடித்து விட்டு. மெல்லப் புன்னகைத்தேன். ஒரு பாடலைப் பாடி முடித்த பிறகு அடுத்த சொல்லைப் பேசுவதென்பது மிகவும் கவனத்திற்குரியதாகிறது. அப்படியான சொற்களின் எடை ஒரு பாடலுக்கு நிகராய் இருந்து விடுபவை.… Read More »18 சுமாராகப் பாடுகிறவள்

17 பேசாமடந்தை

சமீபத்துப்ரியக்காரி 17 பேசாமடந்தை அவளுக்குக் கோபம். தாங்க முடியாத பழிநிறைக் கோபம் அது. இப்போதெல்லாம் ஒவ்வொரு சொல்லாப் பேசுகிறாள். முன்பிருந்த ஆதுரம் முற்றிலுமாய் நீக்கம் செய்யப்பட்ட வேறோர் குரல். நாடறிந்த நடிகனொருவன் தொண்டைப் புண்ணால் பேசமுடியாமற் போகையில் பண்டிகைக் காலத்துக்கு வந்தேயாக… Read More »17 பேசாமடந்தை

16 தாமதி

சமீபத்து ப்ரியக்காரி  16 தாமதி 1 கூந்தல் பிரிகளுடனே வீதியிலெறியப்பட்ட பற்கள் நொதித்த சீப்பின் மீது துளிர்த்து எஞ்சியிருக்கும் சென்ற மழையின் ஈரத்தை மணி நெல்லோவென்றெண்ணி ஒரு முறைக்கு இருமுறை கொத்திப் பார்த்து விட்டுத் தத்தியபடி பறக்க முற்படுகிற பசித்த குருவியின்… Read More »16 தாமதி

15 பெரிய பூ

சமீபத்துப் ப்ரியக்காரி 15 பெரிய பூ அந்த வீதி எனக்கு மிகவும் பரிச்சயம். என் தோற்றுப்போன முதல் சில காதல்களில் ஒன்று கூட அங்கே நிகழ்ந்ததாக ஞாபகம். விஷயம் அதுவல்ல. அந்த வீதி சடாரென்று நடுவில் வளையும். வாழ்வின் எதிர்பாராமையைத் தனதே… Read More »15 பெரிய பூ

14 அதுவாதல்

சமீபத்து ப்ரியக்காரி 14 அதுவாதல் எனக்குச் சொந்தமான தொப்பி. அதை நானே செய்தேனா எனில் இல்லை. எனக்குச் சொந்தமான தொப்பியின் இறகுகள் எங்கெங்கிருந்தோ சேகரமானவை. எனக்குச் சொந்தமான தொப்பியில் எழுதப்பட்டிருக்கும் சின்னஞ்சிறு வாசகத்தின் சொற்கள் மொழியினுடையவை. எனக்குச் சொந்தமான இரு கரங்களால்… Read More »14 அதுவாதல்

13 ஆகவே

சமீபத்துப்ரியக்காரி 13             ஆகவே உனக்கே உயிரென்றானவள் ஒருத்தி உன்னை நீங்கிச் சென்றபிற்பாடு அவள் ஏற்படுத்திப் போகின்ற வெறுமையின் துயர் சொல்லவொண்ணாதது. அவற்றில் ஆயிரம் மழைக்கும் வெப்பத்திற்கும் இடமிருக்கக் கூடும். அவளுக்கு மட்டுமே சொல்லக்… Read More »13 ஆகவே

12 நிபந்தனைகளுக்கு உட்படுதல்

சமீபத்து ப்ரியக்காரி 12 நிபந்தனைகளுக்கு உட்படுதல் அவளென்பவள் சில பாடல்களைத் திரும்பத் திரும்பக் கேட்பாள். அந்தப் பழக்கம் எனக்கும் அவ்விடமிருந்தே வந்து சேர்ந்தது. ஒரு செல்லச்சொல்லை அடிக்கடி உபயோகிப்பாள்.அச் சொல்லை எப்போது கடக்க நேர்ந்தாலும் அவள் குறித்த ஞாபகமாகவும் அதுவே மாறிவிடுகிறது.… Read More »12 நிபந்தனைகளுக்கு உட்படுதல்

11 உருள் பெரும் முத்தம்

சமீபத்துப்ரியக்காரி 11 உருள் பெரும் முத்தம் எதெதையோ வாசித்துக் கொண்டிருப்பதற்கு நடுவே என் மண்டை கொஞ்சூண்டு வீங்கி விட்டது. வாரண்டி இல்லாத பொருட்களின் வரிசையில் தானே சென்ற நூற்றாண்டின் மண்டைகளும் வரும்?. வாசித்தால் அது சீக்கிரம் சூடாகும் என்பதைத் தெரிந்தும் அதைக்… Read More »11 உருள் பெரும் முத்தம்