Writer Aathmaarthi

ஆத்மார்த்தி | எழுத்தாளர்

தேன் மழைச்சாரல் 4

 தேன் மழைச்சாரல் 4  காட்டுக்குள்ளே கண்ட பூ சவுந்தரராஜனின் குரல் அலாதி. அதன் பொதுத் தன்மை மிகவும் கனமாக ஒலிப்பதானாலும் எத்தனை மென்மையான பாடலையும் பாடுகிற வல்லமை மிகுந்தவர் டி.எம்.எஸ். எந்த ஆழத்திற்கும் உயரத்திற்கும் பறந்து திரும்பக் கூடிய குரல்பறவை. இணையற்ற… Read More »தேன் மழைச்சாரல் 4

தேன் மழைச்சாரல் 3

தேன் மழைச்சாரல் 3  உயிர்மொழி தீபம் தமிழ்ப் பாடல்கள் எத்தனையோ மாறுபாடுகளைச் சந்தித்த வண்ணம் இருப்பதுதான். காலத்திற்கேற்ப இசையில் பாடும் குரலில் தொனியில் இசைக்கருவிகளின் பயன்பாட்டில் பாடல் பதிவில் என எல்லாவற்றிலும் ஏற்படுகிற மாற்றங்களைப் போலவே எழுதப்படுகிற பாடல்களிலும் மாறுதல் என்பது… Read More »தேன் மழைச்சாரல் 3

பி.கே

இன்று பி.கே என்றழைக்கப்படுகிற பாரதி கிருஷ்ணகுமாருக்குப் பிறந்த தினம். அன்புக்குரிய பி.கே எனக்கு மிகவும் பிடித்தமான பேச்சாளர் ஆவணப்பட இயக்குனர் சிறுகதை எழுத்தாளர் கட்டுரையாளர் திரைப்பட இயக்குனர் எனப் பல முகங்களுக்குச் சொந்தக்காரரான பி.கே எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு அப்பத்தா என்ற… Read More »பி.கே

தேன் மழைச்சாரல் 2

 தேன் மழைச்சாரல் 2 நியாய தயாநிதி     பேரொளிச் சூரியனும் புலரியின் போழ்தில் சிறுபுள்ளியாய்த் தானே தன்னைத் துவங்கிக் கொள்கிறது அப்படிப் பார்க்கையில் தமிழ்த் திரைப்பா சரிதத்தை எழுத முனையும் யார்க்கும் தொடக்கப் புள்ளியாகத் தென்படுகிற முதற் பெயர் பாபநாசம் சிவன்… Read More »தேன் மழைச்சாரல் 2

தேன் மழைச்சாரல் 1

தேன் மழைச்சாரல் 1 சரஸமும் ஹாஸ்யமும் ஐம்பதுகளின் இறுதி வரைக்கும் தமிழ்த் திரைப்பாடல் செல்திசை அறியாமல் செல்லும் படகைப் போலத் தான் இருந்தது. பாடலின் வடிவம் உள்ளடக்கம் விரிவடையும் தன்மை தொகையறா பல்லவி அனுபல்லவி சரணம் என எல்லாவற்றிலும் இசையின் ஆதிக்கமும்… Read More »தேன் மழைச்சாரல் 1

கவிதையின் முகங்கள் 9

கவிதையின் முகங்கள் 9 கனவின் நேர்நிறை தமிழ்க் கவிதையின் வடிவம், உள்ளடக்கம், சொலல் முறை ஆகியவற்றில் ஒவ்வொரு காலத்திலும் மாற்றங்கள் நிகழ்ந்தே தீரும். மரபுக் கவிதை புதுக்கவிதை இரண்டுக்கும் மத்தியிலான இருள் நீர்ப்பரப்பில் குறும்பாலமொன்றை அமைத்தாற் போல், வசன கவிதை அதற்குண்டான… Read More »கவிதையின் முகங்கள் 9

நடிகன்

நடிகன் குறுங்கதை “வரவிருப்பது யார் தெரியுமா..? வேதநாயகம். தி கிரேட் ஆக்டர் வேதநாயகம் தான்”. விமானத்தில் பலரும் கிசுகிசுத்துக் கொண்டிருந்தார்கள்.குணச்சித்திர நடிப்பில் தனக்குக் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் அடித்து விளாசிக் கொண்டிருந்தார். இந்தப் பத்து ஆண்டுகளில் வேத நாயகம் சம்பாதித்துச் சேர்ந்த… Read More »நடிகன்

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்

                   சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் எழுத்திலிருந்து சினிமாவுக்குக் கதையை இடம் மாற்றுவது கடினவித்தகம். வசந்த் அப்படியான தேடல் தீராமல் இருக்கும் இயக்குனர்களில் ஒருவர். இந்திய அளவில் அந்தாலஜி எனப்படுகிற… Read More »சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்